கொரோனாத் தொற்று காரணமாக மேலும் 48 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 பெண்கள் மற்றும் 26 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொவிட-19 காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 2,862 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.