முல்லைத்தீவில் மர்மப் பொருள் வெடித்து ஒருவர் காயம்

முல்லைத்தீவில் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமான சுவாமி தோட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 03 மணியளவில் குறித்த காணியில் குப்பைக்கு தீ வைத்தபோதே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காணியில் மேற்பார்வையாளராக பணியாற்றும் 55 வயதுடைய நேசன் என்பரே கழுத்தில் காயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Previous articleகொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது,கோத்தாவின் உரை பயனற்றது!
Next articleயாழில் உதயமாகும் பாரிய தொழிற்சாலை!