இனிமேல் நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடுகள் ஒருபோதும் விதிக்கப்படாது!

நாடு முழுவதிலும் இனியும் பயணத்தடை விதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இனி நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடுகள் ஒருபோதும் விதிக்கப்படாது என அவர் தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோது கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட் ஒழிப்பு செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.