யாழில் சற்றுமுன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்!

யாழ்.புத்துார் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றய தினம் இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு உடமைகள் என்பவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.

3 மோட்டார் சைக்கிளில், வாள்களுடன் வந்த 6 பேர்கொண்ட குழுவினாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

Previous articleஇனிமேல் நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடுகள் ஒருபோதும் விதிக்கப்படாது!
Next articleயாழில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் பலி!