யாழில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் பலி!

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

அதன்படி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த காரைநகரை சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரும், மன்னாரை சேர்ந்த 24 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இருவருடைய சடலங்களும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது