கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது!

கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் எம்.எஸ்.சி மெசினா கொள்கலன் கப்பலின் இயந்திர அறையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த தீப்பரவலால் நாட்டின் கடல் பிராந்தியத்திற்கு பாதிப்பு ஏற்படாது என சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

குறித்த கப்பல் தென் கடற்பரப்பின் மகா இராவணா வௌிச்சவீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது தீ பரவியது.

இதேவேளை 28 பணியாளர்களுடன் சென்ற கப்பலில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.