பத்து வாரங்களில் இலங்கையில் தீவிரமடையும் டெல்டா வைரஸ்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த 10 வாரங்களில் இலங்கையில் டெல்டா வைரஸ் பிரதான வைரஸாக மாறி நாடு முழுதும் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் மாறுபாடு குறித்து ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் இது தொடர்பில் தமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

Previous articleகளனி கங்கையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!
Next articleஇலங்கையில் 3 ஆயிரத்தை தாண்டும் கொரோனா மரணங்கள்!