யாழ்.சாவகச்சோி வைத்தியசாலை நோயாளர் விடுதி கூரையிலிருந்து கொட்டும் புறா எச்சம்!

யாழ்.சாவகச்சோி – ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதியின் மேற்கூரையிலிருந்து புறா எச்சங்கள் கொட்டுவதால் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேல்தள கூரையையின் உள்ளே வாழும் புறாக்கள் தமது எச்சங்களை கூரையின் மீது இடுவதால் அதிகளவான எச்சங்கள் கூரையின் மேல் தளத்தில் சேர்ந்துள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த விடுதியில் “லெவல் சீட்” அடைக்கப்பட்டிருந்தும் அவற்றின் இடைவெளிகள் ஊடாக நோயாளர்களின் கட்டில்களில் புறா எச்சங்கள் விழுகின்றன. வைத்திய அதிகாரிகள் சங்கம் அறைகளில் மட்டும் மேல்தள கூரைக்கு

சலோற்ரேப் ஒட்டப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதனால் குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Previous articleயாழில் புனரமைப்பு பணியின்போது ஆபத்தான வெடிகுண்டு மீட்பு
Next articleதுமிந்த சில்வாவைப் போல ஏனைய சிறைக் கைதிகளையும் விடுதலை செய் – வெலிக்கடை சிறைக்கு முன் ஆர்ப்பாட்டம்