துமிந்த சில்வாவைப் போல ஏனைய சிறைக் கைதிகளையும் விடுதலை செய் – வெலிக்கடை சிறைக்கு முன் ஆர்ப்பாட்டம்

துமிந்த சில்வாவைப் போல ஏனைய சிறைக் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு – வெலிக்கடை சிறைக்கு முன் இன்று சனிக்கிழமை பகல் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி இரா. சாணக்கியன், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பினர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனிடையேதான் மேற்படி சிறைக்கு முன்பாகவும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே, மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து, அதனை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கைதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Previous articleயாழ்.சாவகச்சோி வைத்தியசாலை நோயாளர் விடுதி கூரையிலிருந்து கொட்டும் புறா எச்சம்!
Next articleகை கால்கள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையில் மிதந்து வந்த சடலம்!