இன்றைய இராசிபலன்கள்(27.06.2021)

மேஷம்: உங்கள் செயலில் வேகம்கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புத்துணர்ச்சி பெரும் நாள் .

ரிஷபம்: கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும் . பணப் புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில சமயங்களில் விரத்தியாகப் பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளஸ்ரீவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்: கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பொது காரியங்களில் ஈடுபடு வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.

கன்னி: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களால் மகிழ்ச்சி தங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

துலாம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நல்லன நடக்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சியால் முன்னேறும் நாள்.

தனுசு: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடி வடையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.