பேஸ்புக்கில் கிண்டல் செய்த நண்பர்களை சிலுவை வடிவத்தில் ஆணியடித்து சித்திரவதை செய்த கொடூரன்!

பேஸ்புக்கில் கிண்டல் செய்த நண்பர்களை சிலுவை வடிவத்தில் ஆணியடித்து
சித்திரவதை செய்த

முகநூலில் அவமதிக்கப்பட்டதற்காக, தனது இரண்டு நண்பர்களை, சிலுவை வடிவத்தில் ஆணியடித்து
சித்திரவதை செய்த சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் அம்பிட்டியவில் உள்ள தேவலாயம் ஒன்றின் பொறுப்பாளராக
உள்ளதாகவும், இனந்தெரியாத குழுவுடன் இணைந்து இந்த செயலை செய்ததாகவும் பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.

30 வயதான சந்தேக நபர் தனது வீட்டிற்கு நண்பர்களை அழைத்துள்ளார். அவர்களை சிலுவை போன்ற
மரத்தின் மீது ஆணி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சித்திரவதையால் பாதிக்கப்பட்ட 38 மற்றும் 44 வயதுடைய இருவரும் கண்டி தேசிய
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பாலகொல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleதீ விபத்துக்கு உள்ளான மெசினா கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது
Next articleகோவிட்-19 தடுப்பூசி டெல்டா வைரஸ்சுக்கு எதிராக 33 சதவீதம் மட்டுமே செயற்படும்