நாட்டில் கோவிட் தொற்றால் மேலும் 39 பேர் மரணம்

நேற்றைய தினம் (26) நாட்டில் மேலும் 39 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதன்போது,12 பெண்களும், 27 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,944 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 252,257 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களில் 218,998 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleவவுனியாவில் திருடுபோகும் மோட்டார் சைக்கிள்கள்!
Next articleரொறன்ரோ பொலிசாரால் கனடா முழுவதும் தீவிரமாகத் தேடப்படும் இளைஞர்