ரொறன்ரோ பொலிசாரால் கனடா முழுவதும் தீவிரமாகத் தேடப்படும் இளைஞர்

ரொறன்ரோ பொலிசாரின் TPSFS அணியினரால் ஒரு இளைஞர் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியா பகுதியில் துஷ்பிரயோக வழக்கில் தேடப்படும் குற்றவாளி தொடர்பிலேயே ரொறன்ரோ பொலிசாரின் TPSFS அணி கனேடிய மக்களுக்கு இந்த முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது.

20 வயதேயான Maurice Dayard என்பவர் தொடர்பில் கனடா எல்லை பாதுகாப்பு செயலாண்மை நாடு முழுவதுமான தேடுதல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.

பிலடெல்பியா பகுதியில், அத்துமீறி நுழைதல், துஷ்பிரயோகம், சீரழித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக Dayard தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.

ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலின்படி, ஜூன் 26ம் திகதி ஓஷாவாவின் ஃபீல்ட் கேட் மற்றும் ஆர்மண்ட் டிரைவ்ஸ் பகுதியில் பகல் 9.45 மணிக்கு இவர் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் மிகவும் ஆபத்தானவர் மட்டுமல்ல, அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த நபரை அடையாளம் காணும் மக்கள், அவரை நெருங்காமல் உடனடியாக 911 இலக்கத்திற்கு தகவல் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

Previous articleநாட்டில் கோவிட் தொற்றால் மேலும் 39 பேர் மரணம்
Next articleபுளோரிடாவில் இடிந்து விழுந்த கட்டிடம்: உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!