முல்லைத்தீவில் வாள்வெட்டு சம்பவம்!

முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில், வாள்வெட்டு சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவொன்று, அங்கு இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துக்கும் தீ வைத்துவிட்டு, குறித்த குழுவினர் தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleகாணாமல்போனோர் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது – நாமல்
Next articleமாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!