மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!

நாட்டில் எதிர்வரும் வாரத்தில்கூட, மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க COVID-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) பரிந்துரைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தளபதியிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Previous articleமுல்லைத்தீவில் வாள்வெட்டு சம்பவம்!
Next articleபோராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமன்னிப்பு பரிந்துரை கிடையாது!