போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமன்னிப்பு பரிந்துரை கிடையாது!

சிறைச்சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் பெயரை பொதுமன்னிப்பிற்காக பரிந்துரைப்பதைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மரண தண்டனை கைதி துமிந்த சில்வா பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் பல சிறைச்சாலைகளில் மரண தண்டனை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே அவர்கள் சிறைச்சாலை கூரைமீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் சிறைச்சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளின் பெயரை பொதுமன்னிப்பிற்காக பரிந்துரைப்பதைத் தவிர்க்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார்.

Previous articleமாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!
Next articleபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!