யாழில் இரண்டாம் கட்ட தடுப்பூசி இன்று

கொவிவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கு அதன் தொடர்சியாக இன்று (28) திங்கட்கிழமை முதல் யூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும்.

மேலும் இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும்

அத்தோடு பொதுமக்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் தடவை தடுப்பூசி பெற்றுக் கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதனை போன்றே யூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை இரண்டாவது தடுப்பூசிகளினை பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Previous articleஇன்றைய ராசிபலன்-28.06.2021
Next articleயாழில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான பெண் மீது தாக்குதல் முயற்சி!