பூநகரியில் நேர்ந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே பலியான பொலிஸ் உத்தியோகத்தர்!

கிளிநொச்சி- கரடிபோக்கு, பூநகரி இணைப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், யாழ்.பொலிஸ் நிலைய நீதிமன்ற பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த (40 வயது) P.S.குமாரசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர், விடுமுறைக்கு வீடு சென்று கடமைக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், பூநகரி, பரந்தன் வீதிக்கு இடையிலான இணைப்பு வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணிநேரம் சடலம் வாய்க்கால் பகுதியில் காணப்பட்டுள்ளது.

அதனை அவதானித்த சிலர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த அவர்கள், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை முன்னெடுத்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் வேக கட்டுப்பாடை இழந்து குறித்த விபத்து நேர்ந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Previous articleயாழில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான பெண் மீது தாக்குதல் முயற்சி!
Next articleயுவதி என 51வயது வவுனியா ஆண்டியிடம் பல லட்சங்களை இழந்த பிரான்ஸ் இளைஞன்!