யுவதி என 51வயது வவுனியா ஆண்டியிடம் பல லட்சங்களை இழந்த பிரான்ஸ் இளைஞன்!

வவுனியாவைச் சேர்ந்த 51வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரிடம் பல லட்சங்களை பறிகொடுத்துள்ளார் புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்ற 32 வயதான இளைஞன்.

தனது உறவுக்காரர் ஒருவர் மூலம், பண மோசடிக் கும்பல் ஒன்றின் வலையமைப்பில் தொழிற்படும் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவரின் வட்சப் இலக்கத்தை பெற்றுள்ளார் குறித்த இளைஞன்.

குறித்த வலையமைப்பின் இலங்கையின் போலி நிறுவனத்தில் பிரான்ஸ் இளைஞனையும் குறித்த பெண் அங்கத்தவராக சேர்ந்துள்ளாள்.

அதன் பின்னர் பெண்ணும் இளைஞனும் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்குமான தொடர்பு தகாத உறவுக்கும் மாறியதாகத் தெரியவருகின்றது.

குறித்த வவுனியா அன்ரிக்கு 27 வயதில் திருமணம் ஆகிய மகளும் இருக்கின்றார், இந் நிலையிலேயே இவர்கள் பாலியல் ரீதியில் வட்சப்பில் தொர்பு கொண்டு வந்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் பிரான்ஸ் இளைஞனின் தகாத புகைப்படங்கள் வேறு ஒரு இலக்கத்தில் இருந்து அவனுக்கு வட்சப் மூலம் அனுப்பப்பட்டு சமூகவலைத்தளத்தில் பிரசுரிப்போம் என கூறி அச்சுறுத்தி பெருமளவு பணமும் இளைஞனிடம் பறிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படங்களை யாருக்கு அனுப்பியது என்பது இளைஞனுக்கு தெரிந்து அது தொடர்பாக அந்த அன்ரியிடம் கேட்ட போது தனது தொலைபேசி திருட்டுப் போய் விட்டது. அதிலிருந்தே குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

தொடரும் மர்ம குழுவில் அங்கம் வகிப்பவர் என்பதுடன் பல மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கும் இலக்காகி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

தற்போது இது தொடர்பாக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

Previous articleபூநகரியில் நேர்ந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே பலியான பொலிஸ் உத்தியோகத்தர்!
Next articleகொரோனா சிகிச்சை விடுதிக்குள் புகுந்த விசர் நாய்!