சற்றுமுன் வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக முதியவர் ஒருவர் இன்று (27.06) மரணமடைந்துள்ளார்.

வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் குறித்த முதியவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

Previous articleவவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய அதிபர் மரணம்!
Next articleகொழும்பில் மேலும் ஒரு டெல்டா வைரஸ் நோயளி இனங்காணப்பட்டார்!