தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் மீது தாக்குதல்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி (அருள்மதி) மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கொடுக்கிளாய் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு உந்துருளியில் வீடு திரும்பியபோது மூவர் அடங்கிய குழு ஒன்று அவரை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சிங்கள காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஈபிடிபி உறுப்பினர்கள் என்றும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Previous articleசட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது!
Next articleபோலி காசோலைகள் மூலம் 430 இலட்சம் ரூபா மோசடி