யாழ் நெல்லியடி பொலிஸார் நால்வருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34 உத்தியோகத்தர்களிடம் நேற்று (28) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று முன்தினம் (27) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று முன்தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பி.சி.ஆர் மாதிரிகளை வழங்கியிருந்தார்.

அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34 உத்தியோகத்தர்களிடம் நேற்று அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Previous articleஎன்னை கொல்ல வந்த தமிழனுக்கு தோசை வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்!
Next articleஅம்பாறையில் மீனவரிடம் சிக்கிய பாரிய மீன்!