நாட்டில் இதுவரை 2,636,524 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

நாட்டில் 2,636,524 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் 939,472 பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

1,596,487 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 501,007 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 925,242 பேருக்கு கொவிஷீல்ட் முதலாம் தடுப்பூசியும், 374,040 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசி 114,795 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 14,425 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Previous articleயாழ் கடலட்டை பண்ணைக்கு சீன நாட்டவர் இருவர் உட்பட 3 பேர் முதலாளிகள்!
Next articleயாழில் ஒரே குடும்ப பின்னணியில் 15 பேருக்கு கொரோனா!