யாழ் கொக்குவில் பகுதியில் 02 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழு வன்முறை!

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு வராகி கோவிலடி பகுதியில் இன்று மாலை இரு வீடுகளுக்குள் நுழைந்த வாள்வெட்டு வன்முறைக் குழு தாக்குதல் நடத்தியிருக்கின்றது.

4 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 9 பேர் கொண்ட வாள்வெட்டு வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்த தளபாடங்கள், மற்றும் மோட்டார் சைக்கிள், வீட்டுக்கதவு என்பன சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Previous articleஇலங்கையில் மிக விரைவில் புதியக்கட்சியை தொடங்கவுள்ளார் சந்திரிகா?
Next articleகொரோனா வைரஸின் டெல்டா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம்!