கொரோனா வைரஸின் டெல்டா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம்!

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த மூவரும் தற்போது கந்தக்காடு இடைத்தங்கல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த மூவரும் கொழும்பு நகரில் நிர்மாணப்பணிகள் இடம்பெறும் பகுதியொன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ் கொக்குவில் பகுதியில் 02 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழு வன்முறை!
Next articleதீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகளே கரையொதுங்கியுள்ளன – மீதம் எங்கே?