வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தில் இனவாதமா?

வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் இடமாற்றம் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் பணி புரியும் பெரும்பான்மை இன உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியாவில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நீண்டகாலமாக பணியாற்றுபவர்கள் மற்றும் இடமாற்று சுற்று நிருபத்தின் பிரகாரம் இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் சிங்கள் மக்களை உள்ளடக்கிய கிராம சேவையாளர் பிரிவை உள்ளடக்கிய வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் சிங்கள மொழி மூல உத்தியோகத்தர்ளுக்கு இடமாற்றம் வழங்கப்படாமல் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் முறைப்பாடு முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஇலங்கையில் எந்த சீன இராணுவத்தினரும் இல்லை – அடித்துக்கூறும் அரசாங்கம்
Next articleஇன்றைய ராசிபலன் – 30/06/2021