இலங்கையில் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்!

இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயமுள்ளது. இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் பாரதூரமான நிலைமையை சந்திக்க நேரிடும்.

தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் இல்லாவிடினும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் அபாயகரமான சூழல் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

Previous articleவடகிழக்கு வேல்ஸ் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தலிலில்!
Next articleமீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெள்ளைவான் கடத்தல் – இன்று அதிகாலை கடந்தப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்