மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மாகாணங்களுக்கு இடையிலான தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவ்வாறு பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
Next articleசூட்கேசில் மனைவியை வைத்து எரித்த கணவன்!