காரைநகரில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

யாழ்ப்பாணம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் இன்று காலை நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியதாக அதிகரித்த நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு அமைய,

கல்வந்தாழ்வு (J/ 45), கள்ளித்தெரு (J/40)வின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமங்களில் ஒரு கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்டட ஒப்பந்ததாரர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதற்காக வந்து செல்வதாகவும் அவர்களில் சிலருக்கு முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Previous articleயாழ்.சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் டிப்பர் சாரதி படுகாயம்!
Next articleயாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரொனாவுக்கு பலி!