யாழ் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் ஒருவரின் கை துண்டிப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவமொன்றில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றினால் இந்த அட்டூழியங்கள் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் குறைந்தது ஐவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பத்தில் வாகனங்கள் உள்பட பெறுமதியான பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரொனாவுக்கு பலி!
Next articleதினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்