மரண வீட்டிற்கு சென்ற ஐவரால் 148 பேர் தனிமைப்படுத்தலில்!

மாவிலகம பிரதேசத்தில் நேற்று மரண வீடொன்றிற்கு சென்றிருந்த ஐவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

இதனையடுத்து தொற்று உறுதியான ஐவர், சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், குறித்த மரண வீட்டில், இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர், அவரவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களாவர். இத்தகவல்களை ஊவா மாவிலகம பிரதேச பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் உறுதிப்படுத்தினர்.

தொற்று உறுதியான ஐவருக்கும் நேற்றையதினம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டதையடுத்து, இன்று கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous articleமனைவி கொல்லப்பட்ட சம்பவம்; யாழ் நபர் பரபரப்பு வாக்குமூலம்
Next articleயாழில் பேருந்திலிருந்து இறங்கி சென்ற இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல்!