யாழ்.மீசாலை – புத்துார் சந்தியில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற இளைஞன் மீது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றய தினம் காலை மீசாலை – புத்துார் சந்தியில் இடம்பெற்றிருப்பதாக தொியவருகின்றது. சம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்தில் பயணித்த குறித்த இளைஞன் மீசாலை – புத்துார் சந்தியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், இளைஞனை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் தலை, கை, கால் ஆகியவற்றில் காயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை யாழில் அண்மைய நாட்களாக வாள்வெட்டுக்குழுவின் வன்முறை அதிகரித்து வருகின்றதாக சமூகாஅர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.