வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை!

வவுனியா நகரப் பகுதி இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இன்று (01.07) காலை வவுனியா நகரின் பசார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டு நான்கு இடங்களில் சுகாதாரப் பிடிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பசார் வீதி சந்தி, தர்மலிங்கம் வீதி சந்தி, சந்தை உள்வட்ட வீதி சந்தி, மில் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி என்பவற்றில் வைத்து சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது வர்த்தக நிலையங்களில் பணியாற்றியோர், நகருக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தோர், வாகனச் சாரதிகள் என சுமார் 400 இற்கு மேற்பட்டவர்களுக்கு இதன்போது பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன்,

பிசீஆர் எடுத்த பின்பே மக்கள் நகரில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். குறித்த பிசீஆர் முடிவுகைளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

Previous articleயாழில் பேருந்திலிருந்து இறங்கி சென்ற இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல்!
Next articleவவுனியாவில் 30 பேருக்கு கொரோனா!