மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ​மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று (02) காலை இலங்கை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை இன்று (02) அதிகாலை 4.30 மணி அளவில் சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

குறித்த தடுப்பூசி தொகை மத்திய தடுப்பூசி களஞ்சியத்திற்கு லொறி ஒன்றின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் சரக்கு எதிர்வரும் திங்கட் கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Previous articleஈழத்திற்கு வரவேண்டுமென கூப்பிடுறாங்க! மேதகு பட நடிகரின் நெகிழ்ச்சி பதிவு
Next articleயாழில் 6 பேர் கொண்ட கும்பல் மீண்டும் அடாவடி!