இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம்!

இலங்கையில் மேலும் 642 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய இன்றைய தினம் நாட்டில் இதுவரை ஆயிரத்து,815 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 260,904 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்நாட்டு மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 227,840 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆயிரத்து120 ஆக அதிகரித்துள்ளது

Previous articleடெல்டாவை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை!
Next articleமுல்லைத்தீவில் ஏழு பேருக்கு கோவிட் தொற்று!