இருவரை கடத்தி சித்திரவதை செய்த கொடூரன் சிக்கினான்!

பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட அவதூறுக்காக மனிதாபிமானமற்ற முறையில் இருவர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட முக்கியமானவர் இன்று கண்டியின் பலகொல்லயில் கைது செய்யப்பட்டார்.

அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபட்டிருந்தன.

எனினும் அவர் கடந்த ஆறு நாட்களாக தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் (8) அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

பேஸ்புக்கில் அவதூறு பதிவிட்டதாக கூறப்படும் இருவரையும் ஜூன் 25 ம் திகதி இவர்கள் 8 பேரும் சிலுவை தளம் ஒன்றில் அறைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Previous articleமுல்லைத்தீவில் ஏழு பேருக்கு கோவிட் தொற்று!
Next articleபேரூந்தில் பயணித்த 19 வயது யுவதியை துஸ்பிரயோகம் செய்த இருவர்!