பேரூந்தில் பயணித்த 19 வயது யுவதியை துஸ்பிரயோகம் செய்த இருவர்!

ஹொரவிபத்தான பிரதேசத்தில் தனியார் பேருந்தில் பயணித்த 19 வயதுடைய யுவதியை துஷ்பிரயோகம் செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பேருந்தில் வேறு பயணிகள் இல்லாத சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாரதி மற்றும் நடத்துனர் குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Previous articleஇருவரை கடத்தி சித்திரவதை செய்த கொடூரன் சிக்கினான்!
Next articleயாழ்.நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் மாயம்!