யாழ்.நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் மாயம்!

யாழ்.நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவரே மீன்பிடிக்கக் கடலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பவில்லை என முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடலுக்குச் சென்று கரை திரும்பாத நபர் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபேரூந்தில் பயணித்த 19 வயது யுவதியை துஸ்பிரயோகம் செய்த இருவர்!
Next articleயாழிலுள்ள பிரதேசமொன்றில் சமூகதொற்று உருவாகும் அபாயம்!