யாழிலுள்ள பிரதேசமொன்றில் சமூகதொற்று உருவாகும் அபாயம்!

யாழ்.பருத்தித்துறை – தும்பளை கணக்கிலாவத்தை பகுதியில் நேற்றய தினமும் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் சமூக தொற்று உருவாகியிருக்கலாம் என சுகாதார பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அப்பகுதியில் ஒரு குடும்ப பின்னணியின் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அத்துடன் ஒருவர் தொற்றினால் உயிரிழந்திருந்த நிலையில் நேற்றய தினம் இரு பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் சமூகத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இன்று எழுமாற்று பரிசோதனையை அப்பகுதியில் முன்னெடுக்க சுகாதாரத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த முதியவருக்கும் அவரது குடும்பத்தில் மேலும் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மரண நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ்.நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் மாயம்!
Next articleநண்பர்கள் இருவரை சிலுவையில் அறைந்தவர் இவர்தானாம்!