பாடசாலைகள் திறப்பது தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் 1113 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று மட்டக்களப்பிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

அதன்படி, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும், அவர்களது உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் உள்ளிட்டோர் இந்த முறைப்பாட்டை இன்று மட்டக்களப்பில் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, 100 மாணவர்களுக்கு குறைவானவர்களை கொண்ட பாடசாலைகளை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் இம்மாதம் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரித்தானியாவில் மதிப்புமிக்க விருது பெறும் யாழ் பெண்!!
Next articleஇலங்கையில் மாத்திரமே குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கிறது!