மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலாக இவை இன்று அதிகாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

விமான நிலையத்தைவந்தடைந்த தடுப்பூசிகள் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் கொழும்பில் உள்ள மத்திய களஞ்சியத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த வார தொடக்கத்தில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்ட சீனாபோர்ம் தடுப்பூசியின் இரண்டு மில்லியன் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Previous articleஇன்றைய இராசிபலன்கள் – (03.07.2021)
Next articleயாழில் இரு நகைக்கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா!