யாழிற்கு அடுத்த கட்ட தடுப்பூசி நாளை – அங்கஜன் இராமநாதன்

யாழ்ப்பாணத்துக்கு அடுத்த கட்டமாக 50,000 சினோபாம் கொவிட் தடுப்பூசி நாளை கிடைக்குமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகள், கொவிட் தொற்று அதிகமுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

மேலும் தடுப்பூசி வழங்கும் மையங்கள் தொடர்பாக அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை முதற்கட்டமாக வழங்கப்பட்ட இரண்டு தவணைக்குமான தடுப்பூசிகளை யாழ்.மாவட்ட மக்கள் ஆர்வத்தோடு பெற்றுக்கொண்டமையின் காரணமாகவே மேலதிகமாக 50,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடிந்ததாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Previous articleபாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!
Next articleமன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று!