இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்!

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கேகாலை, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடித்துறை பகுதி

கேகாலை மாவட்டத்தின் கேகாலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை காவல்துறை அதிகாரப்பிரிவின் மருதமுனை -3 கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் ஹலமட மற்றும் குருணாகல் மாவட்டத்தின் இலுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் விலோகொட கிராமம் என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன

Previous articleமீட்கப்பட்ட மனித எச்சங்கள் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தருடையதா?
Next articleமேலும் 1,010 பேருக்கு கொவிட்!