நாட்டில் டெல்டா திரிபுடன் 18 தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் டெல்டா திரிபு தொற்றாளர்கள் கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, கொழும்பு தெமட்டகொட பகுதியில் டெல்டா திரிபுடைய 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், புதிதாக டெல்டா திரிபுடைய 13 அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமேலும் 1,010 பேருக்கு கொவிட்!
Next articleபுல் வெட்டும் இயந்திரத்தில் கால் சிக்கியதில் பெண் உயிரிழப்பு!