கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகிறதா?

கொரோனா தொற்றுறுதியானவர்கள் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபுடனான தொற்றுறுதியானவர்கள் இனங்காணப்பட்ட இடங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகிறது.

அந்த இடங்கள் தொடர்பில் மாற்று நடவடிக்கை எடுக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Previous articleமுல்லைத்தீவில் இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குல்!
Next articleநாட்டில் மேலும் 1,022 பேருக்கு கொவிட்!