இங்கிலாந்து அணிக்கு 167 என்ற வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 167 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இங்கிலாந்து அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட டொம் கரண் 4 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

Previous articleபுதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது
Next articleக.பொ. த உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!