கட்டுப்பாடுகளை மீறி யாழ் – கொழும்புக்கு சொகுசு பேருந்துகள் இயக்கம்

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை உதாசீனம் செய்து யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையில் சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நாடளாவிய ரீதியில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக பெரும்பாலானோரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் கட்டுப்பாடுகளை மீறி மட்டக்களப்பு- கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபட்ட சொகுசு பேருந்தினை சுற்றிவளைத்த சுகாதார பிரிவினர், அதில் பயணித்தோருக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொண்டிருந்ததில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகொழும்பின் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்புக் குவியல்கள்!
Next articleசட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட யுவதி அறுவர் கைது!