இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவதில் தளர்வு!

கொரோனா பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இங்கு கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.

விரைவில் இந்த கட்டுப்பாடு அகற்றப்படுகிறது.

இது குறித்து இங்கிலாந்து வீட்டு வசதிதுறை மந்திரி ராபர்ட் ஜென்ரிக் தெரிவிக்கையில்,

வருகிற 19 ஆம் திகதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டப்பூர்வமாக நீக்க தயாராகி வருகிறோம்.

அதன் பிறகு யாரும் முககவசம் அணிய தேவை இருக்காது.

இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன என்றார்.

Previous articleகொரோனாவிற்கு எதிராக செயற்படக்கூடிய ஊசியில்லா தடுப்பு மருந்து!
Next articleஇந்தோனேசியாவில் ஒட்சிசன் தட்டுப்பாடு – 63 பேர் பலி