கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 4 ஆயிரம் முறைப்பாடுகள்!

கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 4 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 48 ஆயிரம் தொலைபேசி அழைப்புகளிலிருந்து இருந்து தகவல்கள் கிடைத்ததாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து 8 ஆயிரத்து 165 முறைப்பாடுகள் கிடைத்தன என்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை சிறுவர்களின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 1929 க்கு தகவல் வழங்கவுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தரம் 6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவை குறித்து தெளிவூட்டும் வகையில் மூன்று புதிய புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.