யாழ் நாரந்தனை கிராமத்தின் ஒரு பகுதி இன்று அதிகாலை 6 மணி முதல் முடக்கம்!

நாட்டில் இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் 3 மாவட்டங்களில் 4 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படுவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருக்கின்றார்.

இதன்படி முடக்கப்படும் பகுதிகளாவன,

யாழ்.மாவட்டம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவு – நாரந்தனை வடமேல் கிராம சேவகர் பிரிவு, மாத்தறை மாவட்டம் – மாத்தறை பொலிஸ் பிரிவு – உயனவத்த, உயனவத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்,

களுத்துறை மாவட்டம் – தொடாங்கொட பொலிஸ் பிரிவு – பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 02 கிராம சேவகர் பிரிவில்

அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று அதிகாலை தளர்த்தப்பட்டது.

Previous articleபூஸா சிறையிலுள்ள மேலும் 30 கைதிகள் கொவிட் தொற்று!
Next articleயாழ்.நெல்லியடி பகுதியில் மருந்தகத்தை உடைத்து கொள்ளை!